ஏ.டி.எம்மில் பணம் திருடும் நபர்களை தேடும் பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்

பணம் மீளப்பெறும் (ஏ.டி.எம்) இயந்திரங்களில் தரவுகளை கொள்ளையிட்டு போலி வங்கி அட்டைகள் மூலம் பணத்தை எடுக்கும் இரண்டு நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் சுமார் 30 லட்சம் பணத்தை இவ்வாறு கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த தகவல் அறிந்தால் அது குறித்து 011-2326670, 011-2320141 மற்றும் 011-2320145 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் பணத்தை கொள்ளையிடும் காட்சிகள் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் அக்குரணை பிரதேசங்களில் உள்ள பணம் மீளப்பெறும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.