சத்தியசாயி பாபாவின் 92ஆவது ஜனன தின பிரார்த்தனை

Report Print Thirumal Thirumal in சமூகம்

சத்தியசாயி பாபாவின் 92ஆவது ஜனன தின பிரார்த்தனை ஹட்டன் சாயி நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சீரடி சாயி பாபாவின் 100 வருட சமாதி தின நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.

சத்திய சாயி பாபா, சீரடி சாயி பாபா, பிள்ளையார் ஆகிய மூவரினதும் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளதோடு, விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், சாயி பஜனை இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.