திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Report Print Mubarak in சமூகம்
104Shares

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் இன்று மாலை கோரிக்கையொன்றை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது மாவட்டத்தில் ஆசிரியர் போட்டிப் பரிட்சையில் சித்தியடைந்தும் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்படாத அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்குள்ளீர்க்கும் போட்டிப் பரிட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமக்கும் வேலை வாய்ப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைந்து செல்லுமாறு கூறியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.