ஹபரணையில் 23 பேர் பொலிஸாரினால் கைது

Report Print Aasim in சமூகம்

ஹபரணை பிரதேசத்தில் இன்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 23 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹபரணை பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காலை பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 23 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாத சந்தேகநபர்கள், கேரள கஞ்சா வர்த்தகர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்கள் என்று பல்வேறு வகையான குற்றங்கள் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்று பிற்பகல் கெக்கிராவை மற்றும் ஹிங்குராக்கொடை பதில் நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.