கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட 1, 119 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிலையில், 1, 441 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டபோதும் 1, 119 பேருக்கு மாத்திரமே இன்றைய தினம் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.