திருமலையில்16 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை வல்லுறவிற்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹீத் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் மொறவெவ பகுதியில் உள்ள பதினாறு வயதுடைய சிறுமியை தொலைபேசி மூலமாக அறிமுகமாகி காதலித்து, சிறுமியின் வீட்டாருக்கு தெரியாமல் சிறுமியை திவுலப்பிட்டிய பகுதிக்குச் அழைத்துச் சென்று தனிமையாக வீடொன்றில் ஒரு மாதகாலமாக வாழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, மொறவெவ பொலிஸார் திவுலப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரையும், சிறுமியையும் அழைத்து விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் திவுலுபிட்டிய ,ஹின்ன கலேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சிறுமி மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers