தலவாக்கலை வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 8.30 மணியளவில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்டத்திற்கருகில் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலி நாட்டிய நிலையில் அதனை உடைத்து எரிந்து தோட்ட மக்கள் எதிப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடையை அகற்றக்கோரியும் தோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எங்க நிலம் எங்களுகே சொந்தம் கடையை அகற்று போன்ற எதிப்பு வாசகங்கள் ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், ஆர்பாட்டத்தினால் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதி 1 மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டது, சம்பவ இடத்திற்கு லிந்துலை பொலிஸார் வருகைந்து காணி அபகரிப்பு தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.