தேர்தலுக்கு முன்னர் விவசாய நிலங்களை விடுவித்து தருமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் போன்ற காணிகளை தேர்தலுக்கு முன்னர் விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த யுத்த காலத்திற்கு முன்னர் ரொட்டவெவ விவசாயிகள் புளியங்குளம் பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த அரசாங்கத்தினால் கமநெகும, மகநெகும திட்டங்களின் ஊடாக விவசாயிகளின் விவசாயத்தினை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன.

தற்போது வன இலாக்கா அதிகாரிகள் அந்த விவசாய காணிகளுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் அரசியல்வாதிகள் பல தடவைகள் பேசியும் இன்னும் மக்களுக்கு சிறந்த பெறுபேற்றினை தரவில்லை.

எனவே, அந்த விவசாய காணியில் விவசாயம் செய்ய அனுமதியை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் தேர்தல் நடைபெற முன்னர் ஜனாதிபதியாகிய தங்களுடைய ஆதரவினை விவசாய மக்களுடைய நலன் கருதி வழங்க வேண்டும்.

Latest Offers