போலி நாணயத்தாளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்
12Shares

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் திருகோணமலை நீதமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் போலி நாணயம் தாள் ஒன்றை வைத்திருந்தமை, போலி நாணயத் தாள்களை பங்கிட்டமை மற்றும் அவற்றைப் பெறுவதற்கு ஊக்குவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 21 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.