வவுனியாவில் வெறும் கதிரைகளுடன் நடைபெறும் கலாச்சார நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்ட கலாச்சார நிகழ்வு நகரசபை கலாச்சார மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

எனினும் குறித்த கலாச்சார நிகழ்வில் பெருமளவிலானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலும் குறித்த எண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் வவுனியா மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் இணைந்து குறித்த கலாச்சார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் முறையான ஒழுங்குபடுத்தல் மற்றும் சரியான முறையில் அழைப்புக்கள் வழங்கப்படாமையினால் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாடசாலை மாணவர்களுடனும், விருந்தினர்களுடனும் குறித்த நிகழ்வு இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சோமரட்ண விதானபத்திரண தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.