மட்டக்களப்பு கடலில் சிக்கிய பெருந்தொகையான பாம்புகள்! காரணம் என்ன?

Report Print Shalini in சமூகம்

அண்மையில் மட்டக்களப்பு, நாவலடியில் கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டிருந்தன.

எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவர் இது குறித்து ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெப்பநிலை காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் இடம்மாற்றம் செய்வது சாதாரண விடயம் எனவும், எனவே இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலில் ஈடுபட்டவர்களின் வலைகளில் பாம்புகள் சிக்கியதை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அண்மைக்காலமாக பல தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவ்வாறு பெருந்தொகையான பாம்புகள் கடற்கரையை அண்மித்த பகுதியில் பிடிபட்டிருந்தன.

இது ஆபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என மீனவர்கள் அச்சம் வெளியிட்டதுடன், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கரைக்கு வந்திருந்திருந்தமையை மீனவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.