தாய் திட்டியதால் மகன் எடுத்த முடிவு? சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Report Print Steephen Steephen in சமூகம்

அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் தாய் திட்டியதால் மகன் ஒருவர் தற்கொலை எனும் விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதவாச்சி, துட்டுவெவ, எட்டவீரகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாயாருடன் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தாயார் மகனை திட்டியுள்ளதால் வீட்டு அறைக்குள் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் 10 வயதான சிறுமி இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டார். சில ஆண் பிள்ளைகள் வீட்டில இருந்து தப்பியோடிய சம்பவங்களும் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.