நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்

Report Print Shalini in சமூகம்

யாழ். நீதிமன்ற வளாகத்தில் 4 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நீதி அமைச்சர் தளதா அதுகோரல மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஜெயமாலனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த நீதிமன்ற கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,

இந்த கட்டடத்தை அமைப்பதற்கு உதவிய நீதி அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிச்சேவையின் ஏனைய ஆணையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தை உள்ளடக்கி 4 மாடி கட்டடம் ஒரு வருடத்தில் கட்டிமுடிக்கப்பட உள்ளது.

இந்த கட்டடத்தில் சட்டத்தரணிகளுக்கு பூரண இருப்பிட வசதி மற்றும் அவர்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த நிகழ்வுக்கு வருகைத்தந்திருந்த அனைவருக்கும் இதன்போது நீதிபதி இளஞ்செழியன் நன்றி தெரிவித்தார்.