தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

சமாதானத்திற்கான புதிய உதையம் மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கலந்துரையாடலில் சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே, மாற்றுக்கொள்கை நிலையத்தின் வடக்கு,கிழக்கு மாகாண இணைப்பாளர் சுரேஸ் குமார், சமாதானத்திற்கான புதிய உதையம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எமில் றொமில்டன் உற்பட பிராந்திய ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.