தமிழர் அதிகம் வாழும் பகுதியில் தனி சிங்கள மொழியிலான பதாதை: நடவடிக்கை எடுப்பாரா புதிய அரசாங்க அதிபர்?

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிங்கள மொழியில் அறிவித்தல் பலகை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கருத்து வெளியிடுகையில்,

இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அனைத்துமே மும் மொழிகளிலும் அமைந்திருந்தன.

எனினும் வவுனியாவிற்கு புதிதாக கடமையேற்று வந்துள்ள அரச அதிபர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்.

இம்முறை புதிதாக மன்னார் வீதியில் கச்சேரிக்கு முன்பாக தனி சிங்கள மொழியிலான பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் அதிகம் வாழும் பிரதேசத்தில் தனி சிங்கள மொழியிலான பதாதை வைத்திருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றதோடு, இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா எனவும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

மேலும், மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக கட்டடத்திலும் தனி சிங்கள மொழியிலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இவை அனைத்திற்கும் பொறுப்பாக ஜனாதிபதியின் இணைப்பாளர் சமிந்த வாசல உள்ளார் என்றும், மாவட்ட செயலகத்தினால் இவை இடம்பெற்றிருப்பதனால் இதற்கு புதிய அரச அதிபர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வாரா என அவர்கள் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.