இலங்கை மீனவர்கள் 17 பேர் இந்திய மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை மீனவர்கள் 17 பேர் இந்திய மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மீனவர்கள் குறித்த கடற்பரப்புக்கு சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர்கள் மீன்பிடிக்காக பயன்படுத்திய 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 மீனவர்கள் இந்திய கடற்பரப்பிலும், 11 மீனவர்கள் மாலைதீவு கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.