ரயில்களில் இடம்பெறும் சீட்டாட்டத்தினால் பயணிகள் திண்டாட்டம்

Report Print Kamel Kamel in சமூகம்

அலுவலக ரயில்களில் இடம்பெறும் சீட்டாட்டங்களினால் பயணிகள் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலுவலக நேரங்களில் பயணம் செய்யும் ரயில்களில் சிறு சிறு குழுக்கள் சீட்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

சிலர் ஒன்றிணைந்து இவ்வாறு சீட்டு விளையாடுவதனால், விளையாடும் இடத்திற்கு அருகாமையில் பயணிகளினால் செல்ல முடிவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அலுவலக நேரங்களில் ரயில் பெட்டிகளில் நிலவி வரும் சனநெரிசல் காரணமாக பெருமளவில் பயணிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொல்கஹாவெல – மொரட்டுவ, மஹவ சந்தி முதல் கோட்டே, கோட்டே – கனேவத்த, கோட்டே – ரம்புக்கன, மாத்தறை – மருதானை, காலி – மருதானை, மருதானை – மாத்தறை, மருதானை காலி ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகளில் சீட்டாட்டம் காரணமாக பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.