யாழ். - கொழும்பு பேருந்துகளில் பொலிஸார் கடும் சோதனை!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொலிஸார் இன்று கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த அனைத்து பேருந்துகளும், யாழ். வளைவுக்கு அருகில் வைத்து பொலிஸார் கடும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னரே பயணிகள் தமது பயணங்களை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.