இரண்டு ஆண்டுகளில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு! நீதிபதி இளஞ்செழியன் உறுதி

Report Print Murali Murali in சமூகம்

யாழ். மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவுப்படுத்தி இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க உள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபருக்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும் நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியுள்ளார்.

யாழ். நீதிமன்ற வளாகத்தில் 4 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“யாழ். மேல் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்படாத 107 வழக்குகள் காணப்படுகின்றன. இதில் 50 வழக்குகள் மிகவும் முக்கியமானவை. இந்த 50 வழக்குகளுக்குமான முக்கியத்துவம் சட்டமா அதிபரிடம் இருந்து கிடைத்துள்ளது.

இந்நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்களை விரைவுப்படுத்தி தீர்ப்பு வழங்க உள்ளதாக” யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை செய்து தீர்ப்பளிப்பதாக சட்டமா அதிபரிடம் தாம் உறுதியளித்துள்ளதாகவும் நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளார்.