சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நடைபயணம்

Report Print Suman Suman in சமூகம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடைபயணமும், நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி கல்வி வலய விசேட கல்வி பிரிவும், டெப்லிங் நிறுவனமும் இணைந்து குறித்த நிகழ்வுகளை இன்று நடத்தியுள்ளன.

இந்த நிலையில், கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு நடைபயணம் கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன், அங்கு பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

மேலும், நிகழ்வில் மெதடிஸ்த மிசன் திருச்சபையின் பேராயர் ஆசிரி பெரேரா, அருட்தந்தையர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.