கொழும்பைச் சேர்ந்த ஒருவர் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கரையோரத்தில் இன்று பிற்பகல் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, நீர்த்தேக்கத்தின் கரையோர பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய ஸமீர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விடுதியில் மூன்று நாட்களாக தங்கியிருந்த மேற்படி நபர் அந்த விடுதிக்கு வந்த வெளிநாட்டு உள்ளாச பயணிகளுடன் டிக்கோயா ஆறு நீர்தேக்கத்துடன் சங்கமிக்கும் பகுதியில் நீராடச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து வெளிநாட்டவரால் மீட்கப்பட்டு உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.