மதுவில் மயங்கிய பெண்! பொலிஸார் எடுத்த முயற்சி

Report Print Manju in சமூகம்

வெளிப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர், மதுபோதையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பிரதேச வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த கிராம மக்கள், இப்பெண் மது அருந்தியுள்ளமை பற்றி அறியாது, ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அப்பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை விசாரிப்பதற்காக முடிந்தளவு சத்தம் போட்டுள்ளனர்.

எனினும் அப்பெண் எழுந்திருக்கவில்லை. தோல்வியடைந்த பொலிஸார், அப்பெண்ணை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் சற்று நேரத்தில், போதை ஓரளவுக்குத் தெளிந்த அப்பெண், பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்ததை அறிந்ததுடன், வெட்கத்தில் அங்கிருந்து ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.