இலங்கை மின்சார சபை மீது கடும் கோபம் கொண்ட சங்கக்கார

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை மின்சார சபையின் செயற்பாடு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

இதன்போது கொழும்பு மின்சார சபை அலுவலகத்தினை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை என குமார் சங்கக்கார அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சங்கக்கார பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில் மின்சார சபையை தொடர்பு கொள்ள முடிந்த ஒருவரேனும் இருக்கின்றீர்களா என சங்கக்கார கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பலர் பதிலளித்துள்ளனர்.

எனினும் கடந்த 4ஆம் திகதி மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்பியமை குறித்து தனது நன்றியையும் குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார்.