மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் இரத்து

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவின் இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த இடமாற்றத்தினை நீதிச்சேவை ஆணைக்குழு வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளையடுத்து இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.