விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் பொலிஸ் உத்தியோகத்தர்

Report Print Shalini in சமூகம்

அனுராதபுரம் - விலாச்சிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து விலாச்சிய பிரதான வீதியின் ஆலயபத்துவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து விலச்சிய நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனுராதபுர பொதனேகம பகுதியைச் சேர்ந்த 48 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.