கொக்காவில் பிரதான வீதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - கொக்காவில் பிரதான வீதி பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டபோதும், நான்கு வருடங்களுக்குள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் பயணிக்க முடியாதிருப்பதாக இந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கொக்காவில் சந்தியிலிருந்து புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் பழையமுறிகண்டி ஆகிய கிராமங்களுக்குச்செல்லும் பிரதான வீதியில் 10 கிலோ மீட்டர் வீதி பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்குள் குறித்த வீதியானது மிக மோசமாக சேதமடைந்து பாரிய குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.

தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் தேங்கி காணப்படுவதுடன், வீதியால் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

சுமார் 1500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்ற இந்த வீதியூடாக கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் இன்று வரைக்கும் எவ்விதமான போக்குவரத்தும் அற்ற நிலையில் இந்த மக்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதியிலிருந்து மணல் கிரவல் போன்றவற்றை கனரக வாகனங்களில் கொண்டு செல்வதனாலலேயே புனரமைக்கப்பட்ட இந்த வீதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரதேசத்தில் இருக்கின்ற வளங்கள் அழிக்கப்படுகின்றனவே தவிர, தங்களின் அடிப்படைத்தேவைகளையோ அல்லது எந்த அபிவிருத்திகளையோ மேற்கொள்ளவில்லை என இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.