அரச அதிபராகும் தகுதி முஸ்லிம்களுக்கு இல்லையா? நாடாளுமன்றில் கேள்வி

Report Print Shalini in சமூகம்

இலங்கையில் 25 மாவட்ட அரச அதிபர்களில் 21 பேர் சிங்களவர்கள், 4 பேர் தமிழர்கள் முஸ்லிம்கள் யாரும் இல்லை.

மாவட்ட அரச அதிபராகக் கூடிய முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லையா? அவர்களுக்கு தகுதி இல்லையா? என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அரச அதிபர்களாக தமிழர்கள் உள்ளனர்.

இலங்கையின் 10 சதவீதமாக உள்ள முஸ்லிம்களில் அரச அதிபராகக்கூடிய தகுதி ஒருவருக்கு கூட இல்லையா என குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு முஸ்லிம் ஒருவர் அரச அதிபராக வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த அரசை எப்படி நல்லாட்சி என்று கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.