வடிகாண்களை சீராக்கும் பணியில் படையினர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணப்படும் வடிகாண் வாய்க்காலை சீராக்கும் பணியினை படையினர் இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் காலப்பகுதிகளில் மழை வெள்ளம் ஊர்மனைகளுக்குள் தேங்கி நிற்கும் அளவிற்கு நகரப் பகுதி வடிகாண்கள் தூர்ந்த நிலையில் காணப்பட்டன.

இவ்வாறான நிலையை தடுக்கும் நோக்கில் இன்றைய தினம் படையினரால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடிகாண்களில் தூர்ந்துள்ள மண் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றி ஊர்மனைகளுக்குள் வெள்ளம் புகுவதை தடுக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.