வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சுரக்ஷா மாணவர் காப்பீடுத்திட்டம் அறிமுகம்

Report Print Theesan in சமூகம்

கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா இலவச மாணவர் காப்பீட்டுத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சுரக்ஷா இலவச காப்பீட்டுத்திட்டம் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானின் இணைப்புச் செயலாளர் து. சுதாகரன், பாடசாலை ஆசிரியரும், தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி ஆகியோர் கலந்துகொண்டு சுரக்ஷா காப்பீட்டுத்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கி வைத்துள்ளனர்.

அத்துடன், இலவச காப்பீட்டுத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக பாடசாலையின அதிபரினால் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கைநூல்களும் மாணவர்களுக்கு மாணவத் தலைவர்களினால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சுரக்ஷா காப்பீட்டுத்திட்டத்தின் நன்மை தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டது.