மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3 பேர் கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பளைப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3பேரை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் கொண்ட 46 மதுபான போத்தல்களை வைத்திருந்த ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணமும், ஒரு மதுபான போத்தலை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

பளைப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதணை நடவடிக்கையின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் 1500 மில்லிலீட்டர் மதுபானத்தை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.