பொப்பிசைப் பாடகர் பொப் மார்லியின் மரணம் கொலை - 36 வருடங்களின் பின் தகவல் வெளியிட்ட சீ.ஐ.ஏ. முகவர்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜமேக்காவை சேர்ந்த பிரபல ஆங்கில பொப்பிசைப் பாடகர் பொப் மார்லியின் மர்மமான மரணம், கொலை என தெரியவந்துள்ளது.

அவருக்கு பரிசளிக்கப்பட்ட காலணியில் புற்றுநோய் வைரஸ் இட்டு பொருத்தப்பட்டிருந்த ஆணி காலில் குத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்ததாக அவருக்கு காலணிகளை பரிசளித்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏ. அமைப்பின் முகவர் தெரிவித்துள்ளார்.

பொப் மார்லி காலணிகளில் ஒன்றை காலில் போட்டுக்கொண்ட போது ஆணி குத்தியதாகவும் அவர் ஹாவுச் என்று சத்தமிட்டதாகவும் சீ.ஐ.ஏ. முகவரான பில் ஒக்சில் என்பவர் கூறியுள்ளார்.

பவ்பளோ சோல்ஜர் போன்ற பாடல்கள் மூலம் அமெரிக்காவின் யெங்கி கலாச்சாரத்தை பொப் மார்லி கடுமையாக விமர்சித்தார். மேலும் ரொகே என்ற பாடல் மூலம் தீவிர அமெரிக்க எதிர்ப்பை அவர் கட்டியெழுப்பியிருந்தார்.

பொப் மார்லி கடந்த 1981ஆம் ஆண்டு உயிரிழக்கும் போது அவருக்கு 36 வயது.

சீ.ஐ.ஏ. அமைப்பு இவ்விதமாக ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் உட்பட பலரை கொலை செய்துள்ளதாக ஒக்சில் கூறியுள்ளார்.

76 வயதான ஒக்சில் கடும் சுகவீனமான நிலையில் மரணிக்கும் தருவாயில் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.