அரசாங்கத்திற்கு கல்வியின் மூலம் இலாபம் இல்லை

Report Print Navoj in சமூகம்

இலவசக் கல்விக்கு உதவும் நாடு என்ற வகையில் நாட்டை நேசிக்க மாவணவர்களாகிய ஒவ்வொருவரும் மாற வேண்டும் என வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.பரீட் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு கல்வி அமைச்சினால் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வைத்திய காப்புறுதி சுரக்ஷ திட்டம் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் மாணவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக சுரக்ஷ என்ற காப்புறுதி திட்டத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்து கொடுத்திருக்கின்றது.

இதன்மூலம் மாணவர்ளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது, அரசாங்கத்திற்கு கல்வியின் மூலம் இலாபம் இல்லை, அரசாங்கத்தின் கண்னுக்குத் தெரியாத அபிவிருத்தியாகத்தான் கல்வி இருக்கின்றது.

மாணவர்கள் தேக ஆரோக்கியத்துடன் எதிர்காலத்தில் கல்வி கற்று முன்னேற வேண்டும், இந்த நாட்டை நேசிக்க வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியின் பங்காளிகளாக நீங்கள் வரவேண்டும்.

இதற்காக கல்வியில் மாணவர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் சுமையைக் குறைப்பதற்காக சுரக்ஷ காப்புறுதி திட்டம் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காப்புறுதி திட்டத்தின் மூலம் சுகாதார காப்பீடு, தீடீர் விபத்துக் காப்பீடு, விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்பன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வின்போது, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.