கைதியை திருமணம் செய்த யுவதி - சிறைச்சாலை மதில் சுவர் முன் தனியாக புகைப்படம்

Report Print Steephen Steephen in சமூகம்

சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவரை இன்று சட்டரீதியாக திருமணம் செய்து கொண்ட யுவதி ஒருவர் சிறைச்சாலை மதில் சுவருக்கு முன்னால் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

கைதி அனுராதபுரம் சிறையில் இருக்கும் போது அவரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

யுவதிக்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதுடன் இதற்கு அமைய சிறைச்சாலையில் இன்று முற்பகல் 9.52 அளவில் சிறைச்சாலை பதிவாளர் ஒருவர் முன்னிலையில் சட்டரீதியான பதிவு திருமணம் நடைபெற்றது.

திருமண ஜோடியின் புகைப்படத்தை சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதி விடுதலையாகும் தினத்தில் அந்த புகைப்படத்தை தம்பதியினர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.