யானை கொல்லப்பட்ட சம்பவம்: தலைமறைவான பௌத்த தேரர்

Report Print Steephen Steephen in சமூகம்

கல்கமுவையில் தல பூட்டுவா என்ற யானை மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பிரபலமான நாயக்க தேரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானை தந்தம் மற்றும் யானை முத்துக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிராம சேவகர், குறித்த பௌத்த நாயக்க தேரரின் வாகன சாரதியாகவும் பணிப்புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாயக்க தேரர் வசித்து வந்த வரலாற்று சிறப்புமிக்க விகாரையிலேயே யானை தந்தம் தொடர்பான வியாபாரம் நடைபெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிராம சேவகரை காப்பாற்றும் கடும் முயற்சிகளில் நாயக்க தேரர் ஈடுபட்டுள்ளதுடன் யானை தந்த கடத்தலுடன் நாயக்க தேரருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 2 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இருந்து நாயக்க தேரர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நாயக்க தேரர் மாறு வேடத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவலகள் கசிந்துள்ளன.

அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க பொலிஸார் உன்னிப்பான அவதானிப்புகளை மேற்கொண்டு வருவதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.