கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் ஒளிவிழா

Report Print Nesan Nesan in சமூகம்

இருளை அகற்றி ஒளியை கொடுக்கும் யேசு கிறிஸ்த்துவின் 2017ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது நேற்று கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நடைபெற்றது.

இக்கல்லூரியில் நடைபெற்ற ஒளிவிழாவில் முதன்மை அதிதியாக செங்கலடி பங்குத்தந்தை ஜீ.மகிமைதாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாணவர்களது கலை நிகழ்வுகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுப்பொருட்களும் அங்கு வருகை தந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்லூரியின் பிரதி முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சுதர்சினி மற்றும் உதவி அதிபர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.