நீதிமன்ற சிறை கூண்டில் இருந்து தப்பிச் சென்ற கைதி

Report Print Steephen Steephen in சமூகம்

மொறட்டுவை நீதிமன்றத்தின் சிறை கூண்டிலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக மொறட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உள்ள சிறை கூண்டிலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் சிறை கூண்டு அமைந்துள்ள அறையின் கூரை ஊடாக தப்பிச் சென்றுள்ளார்.

ஏனைய கைதிகள் சத்தமிட்ட நிலையில் தேடிய போதிலும் கைதிகளை பிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.