படகு கவிழ்ந்ததில் மீனவர் மாயம்!

Report Print Nesan Nesan in சமூகம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை - ஒலுவில் பிரதேச கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் கூறியுள்ளனர். ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது குறித்த படகு கவிழ்ந்துள்ளது.

இதன்போது, ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (வயது-33) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும், பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர்.