புதுக்குடியிருப்பு, நிரந்தர தபாலக கட்டிடத்தினை அமைத்து தருமாறு கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தனியார் கட்டிடத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் பிரதான தபாலகத்திற்கான நிரந்தரக் கட்டிடத்தினை அமைத்துத் தருமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் தபாலக நிர்வாகம் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதான தபாலகமானது இதுவரை நிரந்தரக் கட்டிடம் இன்றி தொடர்ச்சியாக தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகின்றது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து குறித்த தபாலகமானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வீடொன்றில் பெரும் இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.

இந்த தபாலகத்திற்கு புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் காணி வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான கட்டிடம் இதுவரை அமைக்கப்படாதிருப்பதாகவும் காணப்படுகின்றது.

தபாலகம் இவ்வாறு தனியார் வீட்டில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதனால் இதன் கீழுள்ள ஆனந்தபுரம் உபதபாலகம், உடையார்கட்டு உபதபாலகம், விசுவமடு உபதபாலகம் ஆகியவற்றிற்கான பணிகளை முன்னெடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பெரும் நெருக்கடிகள் காணப்படுவதாகவும் தபாலக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers