18 வயதான இலங்கை அகதி ஒருவரின் மிரட்டல்

Report Print Shalini in சமூகம்

இந்தியா - திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற இலங்கை அகதி ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜாய் (18) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த பாளையங்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞரைத் தடுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, தனக்கு அகதிகளுக்கான அடையாள அட்டை முறையாக வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், இது தொடர்பாக பலமுறை மனு அளித்துள்ளதாகவும், இதனால் அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை மீண்டும் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.