முன்னாள் ஜனாதிபதியின் ஒன்னூர் திட்டத்தின் கீழ் 39 குடும்பங்களுக்கான குடிநீர்வசதி

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவுப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 39 குடும்பங்களுக்கு குடிநீர் வசதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சமாதானம் நல்லிணக்கத்திற்கான ஒன்னூர் திட்டத்தின் கீழ் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் காரைதீவு காரியாலயத்தில் இதற்கான நிதிக்கொடுப்பனவை காரைதீவுப் பிரதேச செயலகம் செலுத்தியுள்ளதாக காரைதீவுப் பணிமனையின் பொறுப்பதிகாரி விஜயரெத்னம் விஜயசாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கு தெரிவாகியுள்ள 39 குடும்பங்களில் 17 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களும், மீதி 22 குடும்பங்கள் வருமானம் குறைந்த ஆனால் சமுர்த்தி உதவி பெறாத குடும்பங்களும் ஆகும்.

காரைதீவுப் பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் இதுவரை 4,316 குழாய்நீர் இணைப்புக்கள் உள்ளதாகவும், புதிதாக ஒன்னூர் திட்டத்தின் கீழ் மேலும் 39 இணைப்புக்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் காரைதீவுப் பணிமனையின் பொறுப்பதிகாரி விஜயசாந்தன் தெரிவித்துள்ளார்.

Latest Offers