நாமலுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணை அடுத்த வருடம்

Report Print Steephen Steephen in சமூகம்

முறைகேடான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 5 பேர் மற்றும் கவர்ஸ் கோப்ரேட் சர்விசஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் சாட்சியாளர்கள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்துடன் வேறு ஒரு நிறுவனம் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் போது 30 மில்லியன் ரூபா முறைகேடாக சம்பாதிக்கப்பட்டமை உட்பட 11 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.