மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்

Report Print Steephen Steephen in சமூகம்

தங்கொட்டுவை - தும்மல்கொட்டுவ பிரதேசத்தில் தனது மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய - களுபளுவாவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ருவான் குமார அமரசிங்க என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொலையுண்டவரின் மருமகனான 24 வயதான தரிந்து லக்மால் என்ற இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை 4.45 அளவில் நடைபெற்றதாக தங்கொட்டுவை பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரின் மகளை திருமணம் செய்துள்ள சந்தேக நபர் தனது மனைவியுடன் தங்கொட்டுவை- தும்மலகொட்டுவ விஜயரத்ன வத்தை பகுதியில் தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தேக நபர் பிரதேசத்தில் தொழிற்பேட்டை தொழிற்சாலை ஒன்றில் சேவையாற்றி வந்துள்ளார்.

சந்தேக நபருக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கணவனால் தனக்கு தொந்தரவு ஏற்படுவதாக மகள் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால், வீட்டுக்கு வந்த கொலையுண்ட நபர் தனது மகளை அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் தனது மாமனாரை கத்தியால் குத்தியுள்ளார். கத்தி குத்தில் படுகாயமடைந்த மாமனார், தங்கொட்டுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை நடந்த இடத்தில் இருந்ததாக கூறப்படும் சந்தேக நபரின் தந்தையையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் குறித்து தங்கொட்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers