இலங்கை அகதியான 3 வயது குழந்தைக்கு 50 வயது முதியவர் செய்த கொடூரம்

Report Print Shalini in சமூகம்

இந்தியா - ஓசூர், கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 3 வயது குழந்தையை, 50 வயது முதியவர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதுடன், தடுக்க வந்த குழந்தையின் தாயாருக்கும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மங்களேஸ்வரன் மற்றும் மேனகாவுக்கு 3 வயதில் அனுஸ்ரீ என்ற குழந்தை உள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய மயிலன் என்பவர் குழந்தை அனுஸ்ரீயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதன்போது சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு வந்த தாயையும் முதியவர் தாக்கியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஓசூர் ஹட்கோ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் ஓசூர் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காணொளியை பார்வையிட..

Latest Offers