போராட்டத்தில் மீளக் குதிப்போம்! எச்சரிக்கும் அரசியல் கைதிகள்

Report Print Rakesh in சமூகம்

வவுனியா மேல் நீதிமன்றுக்கு எமது வழக்கு இன்னமும் மாற்றப்படவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றிலும் வழக்கு தவணையிடப்பட்டுச் செல்கின்றது என அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்தவர்களும் எம்மை மறந்துவிட்டார்கள், எமது விடயத்தில் விரைந்து தீர்வு காணப்படாதுவிட்டால் நாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிராக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கு இடமாற்றத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ் அரசியல்வாதிகளின் உறுதிமொழியுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நான்கு தடவைகள் இதுவரை தவணையிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது அதிருப்தியை தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் மத்தியிலிருந்து எமது விடயத்தை மறக்கச் செய்துள்ளதுடன், போராட்டத்தையும் பலவீனப்படுத்தியுள்ளனர். எமக்கு உறுதிமொழி தந்த தரப்பினர், எமது வழக்கு இனியும் இழுத்தடிக்கப்படாமல் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொடர்ந்தும் வழக்குத் தவணையிடப்படுமாயின் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers