இந்திய எல்லையில் மீனவர்களை பல மணி நேரம் சித்திரவதை செய்த இலங்கை கடற்படை

Report Print Evlina in சமூகம்

இந்திய எல்லையில் மீன்பித்துக்கொண்டு இருந்த இராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் பல மணி நேரம் சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களை பல மணி நேரம் சித்திரவதை செய்ததாகவும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாகவும் கரை தீரும்பிய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்று காலை இராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுப்பெற்று கடலுக்கு மீன்பிடிகக்ச் சென்றுள்ளனர்.

இதன்போது கச்சதீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே இரவு 9 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கரை திருமபிய மீனவர்கள் கூறும் போது,

“மீன்பிடிக்கச் சென்ற எங்களது படகை சேதபப்டுத்தியதோடு படகிலிருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன், டீசல், ஜீ.பி.எஸ் கருவி மற்றும் மீன்பிடி சாதனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின் நாங்கள் இந்திய எல்லையில் தான் இருந்தோம் என ஜீ.பி.எஸ் கருவியைக் காண்பித்து எங்களை விட்டுவிங்கள் எனக் கேட்டதற்குப்பின் “இனி கச்சதீவு பகுதிக்கு வரக்கூடாது” என கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர்” எனத் தெரிவித்து்ளனர்.

மீன்பிடிக்கச் சென்று எட்டு மணி நேரத்திற்குள்ளாகவே மீனவர்களையும் படகுகளையும் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து மீன்பிடி சாதனங்களையும் கொள்யையடித்துள்ள சம்பவத்தால் இராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியதுடன், மீனவர்கள் பலத்த நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.