பௌத்த அடையாளத்தை பாதுகாக்க வேண்டும்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

Report Print Steephen Steephen in சமூகம்

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தடைகள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பகுதி நேர வகுப்புகளை நடத்துவதை எதிர்த்து கர்தினால் வெளியிட்ட கருத்துக்கு ஞானசார தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2012ஆம் ஆண்டு இது குறித்து அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எழுத்து மூலம் யோசனைகள் முன்வைத்தாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள் பணத்தை செலவிட்டு மேற்கொண்டு வரும் கருத்தடை வேலைத்திட்டங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விபரங்களை வழங்கியுள்ளதாகவும், ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கு கருத்து வெளியிட்ட கர்தினால், சிங்கள பௌத்த அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள பெறுமதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது எனவும் கூறியுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே உட்பட மேலும் சில பிக்குகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.