திடீரென முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பறந்து சென்ற போர் விமானம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - பிலக்குடியிருப்பு விமான நிலையத்தில் இருந்து பறந்து சென்ற போர் விமானம் ஒன்று யாழ் - பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளினின் பிலக்குடியிருப்பு விமான நிலையத்தை தற்பொழுது இலங்கை விமானப்படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விமான நிலையத்தில் இருந்து இரணைமடு, அனுராதபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு தமது பயணங்களை தொடர்ந்த விமானப்படையினார் இன்று வழமைக்கு மாறாக திடீரென யாழ். பலாலி விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த போர் விமானம் முள்ளிவாய்க்கால், செம்பியன்பற்று, பருத்தித்துறை, உள்ளிட்ட கரையோரப்பகுதி ஊடக பறந்து சென்றுள்ளதை அப்பகுதி பொதுமக்கள் அவதானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers