பியர் விலை குறைந்ததால் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலை: பலர் பாதிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பியரின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக வடக்கில் கள்ளு விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பனை கள்ளு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கள்ளு உற்பத்தியை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ள சுமார் 18,000 குடும்பங்கள் மிகவும் சிரமமான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக பனை கள்ளு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். செல்லையா தெரிவித்துள்ளார்.

பியர் விலை குறைந்துள்ளதால், யாழ்ப்பாணத்தில் கள்ளு விற்பனை 85 வீதமாக குறைந்துள்ளது எனவும், இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் செல்லையா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு போத்தல் கள்ளு 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை விட பியர் விலை குறைந்துள்ளதால், கள்ளு அருந்தி வந்த பலர் பியர் அருந்த பழகிக்கொண்டுள்ளதாக வடக்கு கள்ளு உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.