அம்பாறையில் பெண் ஒருவரை காணவில்லை:உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை - திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் திருக்கோயில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பெண் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் நேற்று முன்தினம் நண்பகல் 12.00 மணியளவில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார் எனவும் இவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவர் வீட்டில் இருந்து வெளியேறும்போது சிவப்பு நிற ஆடையணிந்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.

காணாமல் போனவர் 23 வயது மதிக்கத்தக்க புவனேஸ்வரன் ரிஷ்வினி என தெரிவிக்கப்படுகின்றது.