கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் வீட்டு வேலை செய்ய வேண்டும்

Report Print Steephen Steephen in சமூகம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அவர், வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. வீட்டு வேலைகளை செய்து தயாரானால் அந்த பயணத்தை செல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நாங்கள் யாருக்கும் கடைக்கு போக மாட்டோம். புத்த பகவானுக்கு மாத்திரம் கடைக்கு போவோம்.

மக்கள் இதுவரை தமக்கு செய்துகொண்டது போதும். இதனால், குறைந்த புத்தகங்களை படிக்கக்கூடிய, சமூகத்தில் ஒதுக்கப்படாத, படித்த, இந்த நாட்டுக்கு ஏதேனும் ஒன்றை செய்யக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்ளுங்கள் என நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers